மையம் ஓர் - பார்வை (About the Centre)
பாரதிதாசன் உயராய்வு மையமானது 1995 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்று முதல் பல முனைவர்பட்ட ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வியல் நிறைஞர் மாணவர்கள் பாரதிதாசனைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்று வருகின்றனர். பாரதிதாசனின் சிறப்புகளை உலகிற்கு கொண்டு செல்வதற்கு மற்றுமொரு முயற்சியாக பாரதிதாசனின் 125-ஆம் ஆண்டு பிறந்தநாளில் அவருடைய பல ஆய்வு நூல்களையும் பல கவிதை, சிறுகதை, நாவல் போன்ற இலக்கியங்களையும் திரைப்படப்பாடல்களையும் பாவேந்தர் பாரதிதாசன்
125ஆவது பிறந்தநாள் விழா இணையதளம் என்ற இணையதளத்தில் 40,000 பக்கங்களில் பதிவேற்றி அவருடையப் புகழை உலகறியச் செய்தோம். மேலும் பாரதிதாசனின் அனைத்துப் புகைப்படங்களையும் சேகரித்து அதே நாளில் அருங்காட்சியகத்தையும் தொடங்கினோம். மேலும் ஒவ்வொரு ஆண்டும் பாரதிதாசனின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாளை வெகுச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் பல கருத்தரங்கங்களும், பல அறக்கட்டளைச் சொற்பொழிவுகளும் நடைபெற்று வருகிறது.
பாரதிதாசனின் கருத்துகளை மாணவர்களிடத்தில் கொண்டு செல்லும் முனைப்பில் பாரதிதாசன் உயராய்வு மையமும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளும் இணைந்து 2016-ஆம் ஆண்டு முதல் பாரதிதாசன் பற்றிய சிறப்புச் சொற்பொழிவுகளை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
