அண்ணா இருக்கை
Anna Chair
Bharathidasan University, Tiruchirappalli - 620 024
Tamil Nadu, India
 

அண்ணா இருக்கை : ஓர் அறிமுகம்

பாரதிதாசன் பல்கலைக்கழகமானது சமூகத்தின் மீது அக்கறைக் கொண்ட பேரறிஞர் அண்ணா அவர்களுக்கென்று 2010 – ஆம் ஆண்டு அண்ணா இருக்கையைத் தோற்றுவித்தது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் திங்கள் 15 ஆம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளையும் மற்றும் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகளையும் வழங்கி நமது பல்கலைக்கழகம் கொண்டாடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பல கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன.

அண்ணாவின் கருத்துகளை மாணவர்களிடத்தில் கொண்டு செல்லும் முனைப்பில் அண்ணா இருக்கை மாதந்தோறும் நமது பல்கலைக்கழகத்தில் 'புதன் வட்டக் கருத்தரங்கம்' நடத்தி வருகிறது என்பது குறிப்பித்தக்கது. இந்த புதன் வட்டக் கருத்தரங்கில் அண்ணாவைப் பற்றிய சிந்தனைகளை தமிழறிஞர் ஒருவரைக் கொண்டு சொற்பொழிவு நிகழ்த்தப்பெறும்.

அண்ணா இருக்கையில் செயல்பட்டுவருகின்ற நூலகத்தில் 2,500 புத்தகங்கள் இருக்கின்றன.

திட்டங்கள்

1. புகழ்பெற்ற அண்ணாவின் படைப்புகளை இந்திய மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்தல்
2. புகழ் பெற்ற அண்ணாவின் படைப்புகளை ஆங்கில மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்தல்
3. மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட படைப்புகளை வருங்காலத்தில் பல்கலைக்கழக வெளியீடாக வெளியிடச் செய்தல்

நிகழ்வுகள் மற்றும் ஆண்டறிக்கைகள்

இயக்குநர்

Director, Anna Chair

Dr. A. Edward William Benjamin
Director i/c, Anna Chair
Professor, Department of Education (CDOE)
Bharathidasan University,Tiruchirappalli
E-Mail: edward.a@bdu.ac.in